தனிமை வேண்டாம்
உண்மையில் உங்களுக்கு தனிமை மட்டுமே பிடிக்கும் என்றால் நீங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளீர்கள்.இது உங்களை அறியாமலே நடந்து வருகிறது. உங்களை அழித்தும் வருகிறது . முதலில் தனிமையின் காரணத்தை கண்டுகொள்வோம்
தனிமையின் காரணம் :
இன்றைய வாழ்வில் பலரும் மகிழ்வாக இருப்பதை போல நடிக்கிறார்கள். உதாரணத்திற்கு கூற வேண்டும் என்றால் யாரும் Facebookஇல் அழகில்லாத Photoவை போடுவதில்லை அழும் போது கூட அழகாய் இருக்கவே ஆசைபடுகிறோம். பொய்யான இன்பத்தை தேடி மட்டுமே அலைகின்றோம்.
இதுவே நம்மை பலவிதத்தில் எதிர்பார்ப்பை தூண்டி ஏமாற்றத்தை தருகிறது.
இப்பொழுது தனிமைக்கான தீர்வை காணலாம்:
தனிமை என்பதன் உண்மை பொருள் துணை இல்லாமை. இதிலே நமக்கு விடை கிடைத்து விட்டது. பலரும் இந்த நிலைய அடைய காரணம் ஒரு வரியே
" எவ்வளவு முறை தான் நானே விட்டு கொடுப்பது "
இந்த எண்ணம் நம் மனதில் வராத வரையில் நாம் என்றும் தனிமை என்னும் இருளை தேட தேவையில்லை.
பிரச்சனை இல்லாத மனிதன் உலகில் இல்லை. உண்மையில் நமது மிக பெரிய பிரச்சனை நம்மை தாங்க தோள் இல்லையே என்பது தான்
பேச துவங்குங்கள் :
நிறைய நண்பர்களை சேகரியுங்கள். அவர்களுடன் மனம் விட்டு பழகுங்கள். அவர்கள் உன் உறவினர்களாகவோ, உறவாய் இல்லாதவர்களாகவோ, இவ்வளவு ஏன் உன் தாயாகக் கூட இருக்கலாம். அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்
நம்மில் பல பேருக்கு எல்லாவற்றிக்கும் கோவம் கொள்ளும் எண்ணம் வந்து விட்டது . கோவம் மட்டும் அல்ல EGO, வெறுப்பு, சகிப்பு தன்மை இல்லாதது, விட்டுக்கொடுக்காதது என பல நோய்க்கு அடிமையாகி உள்ளோம். அதை விடுத்து உண்மையாய் பழகி உயர்வான மகிழ்வை பெற முயற்ச்சி சேய்வோம். நம் தனிமை தரும் பெரும் துன்பத்தை வென்று விடலாம் .
எல்லாரும் பொய்யாக இருக்கிறார்கள் என்று எண்ணம் உங்களுக்கு தோன்றினால்.... அப்படி என்றால் நீங்களே எல்லா நேரமும் உண்மையாக இருந்தீர்களா என்று யோசித்து பாருங்கள். அப்படி யோசிக்கையில் சிலரிடம் மன்னிப்பு கேட்க தோன்றும். தாராளமாக மன்னிப்பு கேளுங்கள். நாம் தனிமை வலியில் அழுவதை விட மன்னிப்புடன் கூடிய சிரிப்பு எவ்வளவோ மேல்.
"உனக்காக கவலை பட ஒருவர் இருந்தால் உலகையே நீ வெல்லலாம்"
உண்மையில் தனிமை நல்லதே:
அடுத்தவன் துக்கத்திற்கு ஆறுதலாக இருந்து பார். அந்த ஆறுதலே அவனை வெற்றியாளனாக மாற்றும். அவனின் கண்ணுக்கு நீ ஆண்டவனை தெரிவாய். அடுத்தவனையே மாற்றும் திறமை கொண்ட உனக்கு உன் மனமே ஆறுதலாக மாறும். எல்லா கஷ்டங்களையும் நீயாக எதிர்கொள்வாய்..
எல்லாருடனும் இணைந்து வாழ், தவறுக்கு மன்னிப்பு கேள், விட்டுக்கொடுக்க பழகி கொள், வீண் சிந்தனை விடு இதையெல்லாம் செய்த பின் உன்னை சுற்றி இருக்கும் கஷ்டம் உனக்கு தூசியாக தோன்றும்.
இப்பொழுது நீ தனிமையாக அமர்ந்து உன் நினைவை ஓட்டி பார் உன் மனதில் நிம்மதி எனும் பெரும் மூச்சே இருக்கும். உண்மையில் நல்லவைகளை பற்றியும் நல்லதை பற்றியும் யோசிக்கும் தனிமை மிகவும் நல்லது...
-கவிநேயன்
11 கருத்துகள்:
Super anna
Thanimaiyin azhagaum aaazhathaiyum pathavitamaiku nandri
Fantabulous❤
Fantabulous❤
Super, உண்மையான வார்த்தைகள்.
நன்றி சகோதரி/சகோதரா
நன்றி
நன்றி தங்கச்சி
நன்றிகள்
Hi kavineyan..... arumai keep going..... actually rompa super but intha pukazh namakku pathathu..... so neraya kathukkoga books neraya read pannuga all the best ur future goals.... and happy birthday kavi. Naanum konjam konjam yeluthuve..... but ippo gvt job vaanga involvement athikama irukkanala konjam athula kavanam selutha mudila.... naan job vaangitu ennoda kanava niravetha varuve appo unga books la paathu referrer pannanum. all the best kavi
நன்றி சகோ, என் பிறந்தநாள் உங்களுக்கு எப்படி தெரியும். நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா. வாழ்த்துக்களுக்கும் வரவேற்புக்கும் நன்றி...
கருத்துரையிடுக